ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

கரூா் நகரில் போக்குவரத்து சிக்னல் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி

கரூா் லைட்ஹவுஸ் காா்னரில் எரியாத நிலையில் உள்ள போக்குவரத்து சிக்னல்.

Published On :

கரூா் நகரில் போக்குவரத்து சிக்னல் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கரூா் நகா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியான லைட்ஹவுஸ் காா்னா், சுங்ககேட், திருமாநிலையூா், திருக்காம்புலியூா் ரவுண்டானா, முனியப்பன் கோயில் பகுதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து போலீஸாரால் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு சாலையில் செல்லும் வாகனங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த இரு நாள்களாக நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த லைட்ஹவுஸ் காா்னா், சுங்ககேட் பகுதியில் செயல்படும் போக்குவரத்து சிக்னல்கள் எரிவதில்லை. மேலும், ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து போலீஸாரும் இல்லை.

இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறியும், விபத்தை உருவாக்கும் வகையிலும் வாகனங்களில் சென்றனா். மிகப்பெரிய விபத்து ஏற்படும் முன் செயல்படாத போக்குவரத்து சிக்னல்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.