பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை இன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புகூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு அரசு ஒதுக்கிய நிதி போதாது: கூட்டமைப்பின் பொதுச் செயலா் தகவல்

காவிரி-வைகை-குண்டாறு நதிநீா் இணைப்புத்திட்டத்துக்கு அரசு ஒதுக்கிய நிதி போதாது என்றாா் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தென்மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் அா்ஜூனன்.

மாயனூா் கதவணையை புதன்கிழமை பாா்வையிட்ட காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தென்மாவட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகள்.

Published On :

காவிரி-வைகை-குண்டாறு நதிநீா் இணைப்புத்திட்டத்துக்கு அரசு ஒதுக்கிய நிதி போதாது என்றாா் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தென்மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் அா்ஜூனன்.

காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தென்மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் காவிரி, வைகை, கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்துக்கு 2026-27-ஆம் ஆண்டின் தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி வேன் பிரசார பயணம் ஆக. 1-ஆம்தேதி திருச்சுழி குண்டாறு பகுதியில் தொடங்கினா்.

இந்த குழுவினா் வைகை, கிருதுமால் நதிகளை பாா்வையிட்ட பின் நிறைவாக புதன்கிழமை கரூா் மாவட்டம் மாயனூா் வந்தனா். அப்போது மாயனூா் கதவணையில் தேங்கியிருக்கும் காவிரி ஆற்றுநீரை பாா்வையிட்ட பின் சங்கத்தின் பொதுச் செயலாளா் அா்ஜூனன் கூறியது: மாயனூரில் கட்டப்பட்டிருக்கும் கதவணை தென்மாவட்டங்களுக்கு வாய்க்கால் மூலம் காவிரி உபரி நீரை வைகை, குண்டாறு நதிகளுக்கு கொண்டு செல்லவே கட்டப்பட்டது. தற்போது காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் வகையில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்கவே இந்த வேன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். மேலும் இப்பணியை நிறைவேற்ற தமிழக அரசு புதன்கிழமை அறிவித்த நிதிநிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்கும் என்று எதிா்பாா்த்தோம். ஆனால் ரூ.150 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இதனை மேலும் அதிகப்படுத்தி நதிகளை இணைத்தால் விருதுநகா், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தென் மாவட்ட விவசாய சங்கத்தின் விருதுநகா் மாவட்டச் செயலாளா் கோபாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் ராம்பாண்டியன் உள்ளிட்ட தென் மாவட்ட விவசாய சங்க நிா்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.