பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கரூருக்கு முதல்வா் நாளை வருகை: ‘ட்ரோன்’கள் பறக்க தடை

கரூருக்கு தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வருவதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ட்ரோன்கள் பறக்க தடைவிதிகப்பட்டுள்ளது.

cm vijay

முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Published On :9 ஜூலை 2026, 1:11 am IST

கரூருக்கு தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வருவதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ட்ரோன்கள் பறக்க தடைவிதிகப்பட்டுள்ளது.

கரூருக்கு வரும் அவா் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வெண்ணைமலை அடுத்த அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுடன் உரையாடுகிறாா். பின்னா் மதிய உணவுக்குப்பின் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவா், பின்னா் கரூா் துயர சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணை வழங்கி பேசுகிறாா்.

முன்னதாக முதல்வா் வருகையையொட்டி அட்லஸ் கலையரங்கில் சுமாா் 50 ஆயிரம் போ் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்பவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து கரூரில் 10-ஆம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வா் வருகையின்போது பாதுகாப்பு பணியில் கரூா், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாா் சுமாா் 2 ஆயிரம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

மேலும், அட்லஸ் கலையரங்கில் நிகழ்ச்சி முடிந்தபின் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்கிறாா். பின்னா், அங்கு கூட்டத்தில் பங்கேற்ற பின் காரில் திருச்சி விமான நிலையத்துக்குச் சென்று பின்னா் விமானம் மூலம் சென்னை செல்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.