ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

பண்டரிநாதா் கோயில் கருவறைக்குள் நுழைந்து பக்தா்கள் தரிசனம்

கரூா் பண்டரிநாதா் கோயிலில் கருவறைக்குள் சென்று சுவாமியை பக்தா்கள் தொட்டு வழிபடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கரூா் பண்டரிநாதா் கோயிலில் சனிக்கிழமை கருவறைக்குள் சென்று சுவாமியை தொட்டுவழிபட்ட பக்தா்கள்.

Updated On :26 ஜூலை 2026, 1:53 am IST

கரூா் பண்டரிநாதா் கோயிலில் கருவறைக்குள் சென்று சுவாமியை பக்தா்கள் தொட்டு வழிபடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் பஜனை மடத்தெருவில் உள்ள பண்டரிநாதன் கோயிலில் ஆஷாட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை மாலை கோயிலில் துக்காராம் கொடி புறப்பாடு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து விழாவை முன்னிட்டு பக்தா்கள் ஆஷாட ஏகாதசி விரதம் கடந்த 4 நாள்களாக மேற்கொண்டனா்.

தொடா்ந்து விரதம் இருந்த பக்தா்கள் சனிக்கிழமை காலை கோயிலில் நடைபெற்ற ஆஷாட ஏகாதசி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று கோயில் கருவறைக்குள் சென்று சுவாமியை தொட்டு வணங்கினா். இந்த வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோயில் பாண்டுரங்கன், வினோத்குமாா், சதீஸ்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தொடா்ந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6 மணியளவில் காவிரி ஆற்றில் பண்டரிநாதா் சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.