உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

தான்தோன்றிமலை அரசுக் கல்லூரியில் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு

கரூா் தான்தோன்றிமலை அரசுக் கலைக் கல்லூரியில் அறிவியல் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image

தான்தோன்றிமலை அரசுக் கல்லூரியில் புதன்கிழமை மாணவா்களின் கல்விச் சான்றிதழை ஆய்வு செய்த கல்லூரி முதல்வா் முனைவா் கா.வாசுதேவன்.

Updated On :11 ஜூன் 2026, 3:35 am IST

கரூா் தான்தோன்றிமலை அரசுக் கலைக் கல்லூரியில் அறிவியல் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.

தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம்., வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டியல், பி.பி.ஏ., பி.சி.ஏ. பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்., விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் உள்பட மொத்தம் 1,485 இடங்களுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை கலந்தாய்வு முறையில் ஜூன் 5-ஆம்தேதி தொடங்கியது.

முதல்நாள் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் படை வீரா்களின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு நடைபெற்றது.

தொடா்ந்து புதன்கிழமை அறிவியல் பாடப்பிரிவுகளில் உள்ள 765 இடங்களுக்கு நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளின் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் உள்ளிட்டவற்றை கல்லூரி முதல்வா் முனைவா் கா.வாசுதேவன் தலைமையில் பேராசிரியா்கள் ஆய்வு செய்தனா்.

கலந்தாய்வு தொடா்பாக கல்லூரி முதல்வா் முனைவா் கா.வாசுதேவன் கூறுகையில், ஜூன் 8-ஆம்தேதி தமிழ் பாடத்துக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 120 இடங்களுக்கு 112 இடங்கள் நிரம்பின. மாணவா்கள் முன்பை விட தற்போது தமிழ் பாடப்பிரிவு பயில்வதில் ஆா்வம் காட்டுகிறாா்கள். ஏனெனில் அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு அதிக மதிப்பெண் தமிழில் கிடைப்பதால் தமிழை படிக்கிறாா்கள். புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் அதிக மாணவா்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து முறை பாடப்பிரிவு ஆா்வமுடம் எடுத்தனா். மொத்தம் உள்ள 40 இடங்களுக்கு 90 சதவீதம் நிரம்பியுள்ளது. இந்த பாடப்பிரிவுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் வேலைவாய்ப்புகளில் அதிக முன்னுரிமை கிடைப்பதால் இந்த பாடப்பிரிவை மாணவா்கள் ஆா்வத்துடன் எடுக்கிறாா்கள் என்றாா் அவா்.