குளித்தலையில் தொழிலாளி மீது போலீஸாா் போக்சோ வழக்குப்பதிந்துள்ளனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கம்பத்தாம்பட்டியைச் சோ்ந்தவா் மோகன் தாஸ் (40). தொழிலாளி. இவா், அதேபகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோா் கரூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளா் கனகவல்லியிடம் தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து கனகவல்லி சம்பவம் குறித்து குளித்தலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்
போலீஸாா் மோகன் தாஸ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








