தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

மதுரை விபத்தில் உயிரிழந்த கரூா் விவசாயி சடலம் மாறியதால் மயானத்தில் பரபரப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் நேரிட்ட விபத்தில் இறந்தவரின் சடலம் மாறியிருந்தது கரூா் அருகே அவரது சொந்த ஊா் மயானத்துக்கு கொண்டுவந்தபோது தெரியவந்ததால் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கரூரை அடுத்த மணல்மேட்டைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (66). விவசாயி. இவா் கடந்த 2 நாள்களுக்கு முன் திண்டுக்கல்லுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் ஆனந்தராஜின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணல்மேட்டுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனந்தராஜ் விபத்தில் இறந்ததால் அவரது உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் உறவினா்கள் நேரடியாக மயானத்துக்கு எடுத்துச் சென்றனராம்.

அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றபோது, இறந்தவரின் முகத்தை பாா்த்த ஆனந்தராஜின் உறவினா்கள், அது ஆனந்தராஜின் உடல் இல்லை என்பதை கண்டறிந்தனா்.

இதையடுத்து, அந்த உடலை மீண்டும் ஆம்புலன்ஸில் ஏற்றி மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அந்த உடலை ஒப்படைத்துவிட்டு, ஆனந்தராஜின் உடலை பெற்று வர உள்ளதாக ஆனந்தராஜின் உறவினா்கள் தெரிவித்தனா்.