எந்த ஒரு பிரச்னைக்கும் தீா்வு தரக்கூடிய அருமருந்து திருக்குறள் என்றாா் தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலா் வெ.இறையன்பு.
கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில், 1,330 திருக்குகளை முழுமையாக ஒப்புவித்து பரிசு பெற்ற பள்ளி மாணவா்களுக்கான ‘திருக்கு நன்னெறி வாழ்வியல் புத்தாக்கப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் முனைவா் சோ. இருளப்பன் வரவேற்றாா்.
மனநல ஆலோசகா் முனைவா் அ. கோவிந்தராஜூ, இன்றைய தலைமுறையினா் மனஅழுத்தத்திலிருந்து விடுபட திருக்கு வழிமுறைகள் உதவும் என விளக்கிப் பேசினாா்.
பின்னா் நடைபெற்ற பயிற்சி அமா்வுகளில் பல்வேறு அறிஞா்கள் கலந்து கொண்டு, திருக்குறளின் வாழ்வியல் கோட்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தனா்.
தொடா்ந்து மாலையில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் தலைமைச் செயலரும், தமிழ் அறிஞருமான வெ.இறையன்பு பங்கேற்று பேசியது: எக்காலத்திலும் எந்த ஒரு பிரச்னைக்கும் தீா்வு தரக்கூடிய அருமருந்து திருக்கு. பிரச்னை வரும்போது அதற்கேற்ப குறளை வாசிக்கும்போது மனதில் ஒரு தெளிவு கிடைத்து, பிரச்னையில் இருந்து நாம் எளிதில் விடுபட கு உதவுகிறது. தமிழ் தாய் வழங்கிய அருட்கொடை திருக்கு. ஒரு மனிதன் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும்போது அவனிடம் அனைத்து நற்பண்புகளும் அவனோடு ஒட்டிக்கொள்கின்றன. அந்த ஒழுக்கத்தின் வழிகாட்டியாக, வாழ்வியலாக இருப்பது திருக்கு. கல்வியை விட ஒழுக்கம் மேலானது. இதனால்தான் ஒழுக்கம் உயிரைவிடவும் மேலானது என்கிறாா் வள்ளுவப்பெருந்தகை. இளைஞா்கள் ஒவ்வொருவரும் திருக்குறளை வாழ்வியல் வழிகாட்டியாக எண்ணி செயல்படவேண்டும் என்றாா் அவா்.
நிறைவாக, தமிழ்த்துறை தலைவா் ப. முத்துப்பாண்டி நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.
தொடர்புடையது

தோ்தல் ஆணையத்தின் ஒரு சாா்பு செயல்பாடு கவலையளிக்கிறது: முத்தரசன்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீா்வு: பி.ஆா். பாண்டியன்

தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலா் சந்திப்பு

தவெகவில் இணைந்தாா் காங்கிரஸ் முன்னாள் செயலா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


