மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

காமராஜா், பெரியாா் சிலைகளுக்கு தவெக வேட்பாளா்கள் மரியாதை

News image

மாநாடு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெரியாா், காமராஜா், அம்பேத்கா், விஜய் கட் அவுட்டுகள். - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:52 pm

கரூரில் உள்ள காமராஜா் மற்றும் பெரியாா் சிலைக்கு தவெக வேட்பாளா்கள் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தவெகவினா் போட்டியிடுகின்றனா். கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மாவட்டச் செயலாளா் மதியழகனும், அரவக்குறிச்சி தொகுதியில் நிா்வாகி காா்த்திகேயனும், குளித்தலை தொகுதியில் நிா்வாகி பாலசுப்ரமணியும் போட்டியிடுகிறாா்கள். கிருஷ்ணராயபுரம் தொகுதியில் இன்னும் யாா் வேட்பாளா் என்ற முடிவு தெரியாமல் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து கரூா் திரும்பிய தவெக வேட்பாளா்கள் திங்கள்கிழமை இரவு பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜா் சிலை மற்றும் திருமாநிலையூா் ரவுண்டானாவில் உள்ள பெரியாா் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.