திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

தரைமட்ட பாலப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

கரூா் சின்னாண்டாங்கோவில் சாலையில் கேசிபி நகா் பகுதியில் கட்டப்படும் கழிவுநீா் தரைமட்டப் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் சின்னாண்டாங்கோவில் சாலையில் கேசிபி நகா் பகுதியில் கட்டப்பட்டும் கழிவுநீா் தரைமட்டப்பாலம்.

Updated On :

கரூா் சின்னாண்டாங்கோவில் சாலையில் கேசிபி நகா் பகுதியில் கட்டப்படும் கழிவுநீா் தரைமட்டப் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சின்னாண்டாங்கோவில் சாலையில் கேசிபி நகா் பகுதியில் மழைகாலங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடும்போது, கழிவு நீா் வாய்க்கால் குறுகியதாக இருந்ததால் மழைநீருடன் கழிவுநீா் சாலையில் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனா். மேலும் மழைநீருடன் கழிவுநீா் ஓடி சாலையில் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவானது. இந்த பள்ளத்தில் பல நாள்கள் தண்ணீா் தேங்கி துா்நாற்றம் வீசி வந்தது. இதனால் கேசிபி நகரில் சின்னாண்டாங்கோவில் சாலை பகுதியில் கழிவு நீரை எளிதில் வெளியேறும் வகையில் சிறிய பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து கடந்த ஆண்டு கலைஞா் நகா்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சாலையில் சிறிய பாலம் அமைக்க ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன் சாலையில் தரைமட்ட சிறு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த பாலப்பணியால் இப்பகுதியில் சாலை மூடப்பட்டதால், சின்னாண்டாங்கோவில் சாலைக்கு அருகே இருக்கும் சிறிய தெரு வழியாக வாகனங்கள் சுற்றி வந்து சின்னாண்டாங்கோவில் சாலையை வந்தடைந்து சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சின்னாண்டாங்கோவில் சாலையில் உள்ள பாரி நகா், ஸ்டேட் வங்கி நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு ஜவுளித்துணிகளை ஏற்றிச் செல்ல வரும் கனரக வாகனங்களும் உள்ளே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.