2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

சர்வதேச மாணவர் தின விழா

பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எக்ஸ்னோரா மற்றும் யுரேகா குவிஸ் சங்கம் சார்பில், சர்வதேச மாணவர் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 9:55 pm

DIN

பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எக்ஸ்னோரா மற்றும் யுரேகா குவிஸ் சங்கம் சார்பில், சர்வதேச மாணவர் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள், சர்வதேச மாணவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி நடத்தப்பட்ட விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார்.  
கட்டுரைப் போட்டியில் மாணவி டி. பானுப்பிரியா முதலிடமும், எஸ். சம்யுக்தா 2 ஆம் இடமும், பி. சூர்யா 3 ஆம் இடமும், காகிதம் வெட்டி ஒட்டுதல் போட்டியில் பி. பிரிதிவிராஜ் முதலிடமும், டி. பிரியதர்ஷினி 2 ஆம் இடமும், பி. ஜெயந்தி 3 ஆம் இடமும் பெற்றனர்.
வினாடி- வினா போட்டியில் பி. கதிர்வேல் அணி முதலிடமும், ஆர். நவீன் அணி 2 ஆம் இடமும், எல். சக்திவேல் அணி 3 ஆம் இடமும் பெற்றனர். போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள், மரக்கன்றுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர் எஸ். ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். மாணவி டி. திலகா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.