வன் கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தத்தை மறு ஆய்வு செய்யவும், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே மாவட்ட செயலாளர் சி. தமிழ்மாணிக்கம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட கட்சியின் மாநில நிர்வாகி வீர. செங்கோலன், செய்தி தொடர்பாளர் உதயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், பாஸ்கர் உள்ளிட்ட 30 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் டி. தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி, நகர பொருளாளர் சித்தர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவாஜி மூக்கன், ராமசாமி, வட்டாரத் தலைவர்கள் செல்வம், செந்தில், மகிளா காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ரோஹிணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுடனான ஒப்பந்த ஆவணத்தை விரைவில் வெளியிடுவேன்: டிரம்ப்

டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கு? - கனிமொழி கேள்வி | DMK | TVK






