மே 2 முதல் கோடை கால சிறப்பு பயிற்சி
பெரம்பலூர் மாவட்ட கலை பண்பாட்டுத் துறை சார்பில், கோடை கால கலைப் பயிற்சி முகாம் மே 2 ஆம் தேதி தொடங்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.


பெரம்பலூர் மாவட்ட கலை பண்பாட்டுத் துறை சார்பில், கோடை கால கலைப் பயிற்சி முகாம் மே 2 ஆம் தேதி தொடங்குகிறது எனத் தெரிவித்துள்ளார் திருச்சி மண்டல கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் குணசேகரன்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில், ஜவகர் சிறுவர் மன்றம் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம் ஆகிய கலைப் பிரிவுகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கலை பண்பாட்டு துறை சார்பில், கலைத்திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மே 2 ஆம் தேதி முதல் மே 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாமில், நாள்தோறும் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை குரலிசை, நடனம், ஓவியம், சிலம்பம் ஆகிய கலைப் பிரிவுகளில் 5 வயது முதல் 16 வயதுக்குள்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு கலைப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் மே 2 ஆம் தேதிக்குள் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...