ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு வாகனங்கள் மூலம் பந்தயங்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல்.
இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திங்கள்கிழமை (டிச. 31) இரவு கேளிக்கை சவாரி, வேடிக்கை சவாரி உள்ளிட்ட பந்தயங்கள் மூலமாக வாகனங்களை அதிவேகமாக, அஜாக்கிரதையாக இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்ட வாகன ஓட்டுநர்கள் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நடக்க வேண்டும். மேலும், புத்தாண்டின்போது எந்த அசாம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கவும், புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாடவும், சட்டத்துக்குள்பட்டு செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. இந்த உத்தரவுகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா பந்துவீச்சு: மூத்த வீரர்களான ரோஹித், கோலி, கே.எல். ராகுல் சேர்ப்பு!

உண்ணாவிரதத்தைக் கைவிடுக.. ஜூலை 16ல் சோனம் வாங்சுக்கை சந்திக்கிறார் கேஜரிவால்!
அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமி

தும்பாட் இரண்டாம் பாகத்தில் இணைந்த ஆலியா பட்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK


