அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக வாரந்தோறும், முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும் என்றார் ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியது:
அரசுத் திட்டங்கள், முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து வரும் மனுக்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் அனைத்து துறை முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திங்கள்கிழமை தோறும், ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும்.
அனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முறையாக பதிலளிக்க வேண்டும். கோரிக்கை ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில், அதை உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர், மகளிர் திட்ட அலுவலர் சு. தேவநாதன் உள்ளிட்ட அனைத்து துறைகளின் முதன்மை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!

சங்கராபுரத்தில் ஹாட்ரிக் முனைப்பில் திமுக! வீழ்த்த முயலும் அதிமுக!

விழுப்புரம் மாவட்டத்தில் 19 வேட்பாளா்கள் மீது வழக்கு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

