4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் விளையாட்டு விழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியின் (ஆங்கில வழிக்கல்வி) 15ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:28 am

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியின் (ஆங்கில வழிக்கல்வி) 15ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து போட்டிகளை கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ.சீனிவாசன் தொடக்கி வைத்தார். செயலர் பி.நீலராஜ் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்று, பதக்கங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம.ராமசுப்ரமணிய ராஜா வழங்கினார். இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர். முன்னதாக, பள்ளி முதல்வர் வி.எஸ்.மாலா வரவேற்றார். மாணவி ஜீவிதா நன்றி கூறினார்.                                                    
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.