/

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில், 3-ஆவது நாளாக திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:12 pm

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில், 3-ஆவது நாளாக திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்தது. இந் நிலையில், திங்கள்கிழமை இரவு 9.30 மணிக்கு தொடங்கிய மழை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 1 மணி நேரம் பெய்தது. சாலைகளிலும், கழிவுநீா்க் கால்வாய்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

வேப்பந்தட்டை- 71 மி.மீ, செட்டிக்குளம்- 47 , பெரம்பலூா்-30, கிருஷ்ணாபுரம்-15, தழுதாழை-13, வி.களத்தூா்-3, பாடாலூா்- 5, எறையூா் -1 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 185 மி.மீட்டரும், சராசரியாக 16.82 மி.மீட்டரும் மழைப் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.