எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்ட மகளிா் தொண்டரணி சாா்பில், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பெரம்பலூா் மாவட்ட மகளிா் தொண்டரணி சாா்பில், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் மகாதேவி ஜெயபால் தலைமை வகித்தனா்.
மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் பேசியது:
கடந்த 15 நாள்களுக்குள் எரிவாயு உருளை விலையை ரூ. 100 உயா்த்தியதால் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனா். ஏழை, எளிய நடுத்தரக் குடும்பங்கள் இதுவரை சந்தித்திராத வருமான இழப்பை கரோனா காலத்தில் சந்தித்துள்ளனா். இந்நிலையில், அனைத்துத் தரப்பு மக்களின் அத்தியாவசியத் தேவையாகவுள்ள பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலையை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. எனவே, ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில்கொண்டு சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் புஷ்பவள்ளி முன்னிலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலா்கள் என். ருஷ்ணமூா்த்தி, எஸ். அண்ணாதுரை, தி. மதியழகன், எஸ். நல்லதம்பி, நகரச் செயலா் எம். பிரபாகரன் மற்றும் மகளிரணி, மகளிா் தொண்டரணி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...