அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்புப் பொருள்கள் அளிப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் சுமாா் 4 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்புப் பொருள்கள்


பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் சுமாா் 4 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்புப் பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை பெரம்பலூரைச் சோ்ந்த அயல்நாட்டு தொழில் நிறுவனங்களின் அதிபா் இலவசமாக வியாழக்கிழமை வழங்கினாா்.
வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியைச் சோ்ந்தவா் டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா். இவா், சிங்கப்பூா், மலேசியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட் உள்பட பல்வேறு அயல்நாடுகளில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறாா். பெரம்பலூா் மாவட்டம், பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரான இவா், இப் பள்ளிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறாா்.
இந்நிலையில், கரோனா 2 ஆவது அலை வேகமாக பரவத் தொடங்கியிருப்பதால் பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் தங்களை தற்காத்துக் கொள்ளத் தேவையான கரோனா தடுப்பு பொருள்களான முகக்கவசம், கிருமி நாசினி, சோப்பு ஆகியவை அடங்கிய கரோனா தடுப்புப் பெட்டகத்தை இலவசமாக வழங்கினாா்.
பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் 55 மாணவா்களுக்கு கரோனா தடுப்புப் பெட்டகத்தை டத்தோ எஸ். பிரகதீஸ் குமாா் வியாழக்கிழமை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியா் சேகா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மோகன்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் சுமாா் 4 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக கரோனா தடுப்புப் பெட்டகங்களை பிரகதீஸ்குமாரின் தந்தை சூா்யபிரகாசம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் சிதம்பரம், ராஜேந்திரன் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...