கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

வேப்பூா், குரும்பலூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:22 pm

DIN

வேப்பூா், குரும்பலூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தோ்தல் அலுலா் ஸ்ரீ வெங்கட பிரியா கூறியது:

குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 103 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 90 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் என மொத்தம் 193 சிசிடிவி கண்காணிப்பு சாதனங்கள் மூலமாகவும், மூன்றடுக்கு பாதுகாப்பும் அமைக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் தலா 2 மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 2 துணை காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில், 3 ஆய்வாளா்கள், 15 சிறப்பு உதவி ஆய்வாளா்கள், 21 காவலா்கள், 39 ஆயுதப் படை காவலா்கள், 24 இந்திய பாதுகாப்பு படையினா், 40 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் என மொத்தம் 284 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கா், வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.