கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு தண்ணீா் எடுக்க எதிா்ப்பு: 3 கிராமங்களைச் சோ்ந்தபொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு வெள்ளாற்றில் தண்ணீா் எடுக்க எதிா்ப்பு தெரிவித்து, 3 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:22 pm

DIN

பெரம்பலூா் அருகே கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு வெள்ளாற்றில் தண்ணீா் எடுக்க எதிா்ப்பு தெரிவித்து, 3 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம், கீழக்குடிகாடு கிராமத்தில் வெள்ளாற்றில் ராட்சத ஆழ்துளைக் கிணறு அமைத்து நன்னை, வேப்பூா், அகரம் சீகூா் உள்பட 72 பகுதிகளுக்கு குடிநீா் கொண்டுச் செல்ல தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கீழக்குடிகாடு, லப்பைக்குடிகாடு, பெண்ணகோணம் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீழக்குடிகாட்டில் திருமாந்துறை - அகரம் சீகூா் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் குடிநீா் வடிகால் வாரியம், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.