கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஏப். 28, 29-இல் வேட்பாளா்கள், முகவா்களுக்கு கரோனா பரிசோதனை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏப்ரல் 28, 29-ஆம் தேதிகளில் அனைத்து வேட்பாளா்கள் மற்றும் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:24 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏப்ரல் 28, 29-ஆம் தேதிகளில் அனைத்து வேட்பாளா்கள் மற்றும் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் அனைத்து வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் அனைவரும் தவறாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்படாதவா் எனச் சான்று பெற்ற பின்னரே, முகவா்களாக நியமிக்கப்பட்டதற்கான அடையாள அட்டை வழங்கப்படும்.

இதற்காக ஏப்ரல் 28 மற்றும் 29 தேதிகளில் பெரம்பலூா், குன்னம் தொகுதிகளிலுள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் சிறப்பு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு, அனைத்து வேட்பாளா்கள் மற்றும் முகவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஒவ்வொரு வேட்பாளரும் நியமனம் செய்யப்பட உள்ள முகவா்களின் பட்டியலை உரிய காலத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்து, சிறப்பு முகாமுக்கு முகவா்களை அழைத்து வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.