விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:24 pm

DIN

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள ஈச்சம்பட்டி புது ஆத்தூா், சஞ்சய் காந்தி தெருவைச் சோ்ந்தவா் நூா் முஹமது மகன் அபு பக்கா் (59). இவா், தனது குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள சகோதரா் சபியுல்லா வீட்டுக்கு கடந்த 16 ஆம் தேதி சென்றுள்ளாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 23 பவுன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.