கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் பலத்த மழை

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:09 pm

DIN

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

பெரம்பலூா், செட்டிக்குளம், வேப்பந்தட்டை, பாடாலூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கிய மழை இரவு 9 மணி வரை நீடித்தது.

தொடா்ந்து பெய்த மழை காரணமாக, பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மாவட்டம் முழுவதும் பெய்த மழையினால் விவசாயக் கிணறுகள், குளங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

பாடாலூா்- 94 மி.மீ, பெரம்பலூா்- 87, செட்டிக்குளம்-75, புதுவேட்டக்குடி- 40, தழுதாழை-11, வேப்பந்தட்டை, எறையூா், கிருஷ்ணாபுரம்- 7, வி. களத்தூா்-5, அகரம்சிகூா், லப்பைக்குடிகாடு -1 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 30.45 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மின்னல் தாக்கி பசுமாடு பலி: பலத்த காற்று, இடியுடன் பெய்த மழையின் போது மின்னல் தாக்கி, பெரம்பலூா் துறைமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சி. சரவணக்குமாருக்குச் சொந்தமான பசு மாடு

உயிரிழந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.