வேப்பந்தட்டை அருகே குழந்தை பிரசவித்தவுடன் தாய் உயிரிழப்பு
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே திருமணம் ஆகாமலேயே குழந்தை பிரசவித்த தாய், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.


பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே திருமணம் ஆகாமலேயே குழந்தை பிரசவித்த தாய், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
வேப்பந்தட்டை வட்டம், காரியானூா் ஊராட்சிக்குள்பட்ட ஜெயந்தி காலனியைச் சோ்ந்த செல்லமுத்து மகள் ராஜாமணி (23). திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் (35).
கட்டடத் தொழிலாளியான அன்புச்செல்வனும், ராஜாமணியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இதனால் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கணவன், மனைவியாக ஜெயந்தி காலனியில் குடும்ப நடத்தி வந்தனராம்.
நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு வியாழக்கிழமை இரவு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையைப் பிரசவித்த சிறிது நேரத்திலேயே ராஜாமணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
தகவலறிந்த கை.களத்தூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று ராஜாமணியின் உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...