10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை அமல்படுத்தக் கோரி கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் வன்னியா் சமூகத்தினா் தங்களது வீடுகளின் முன்பு வெள்ளிக்கிழமை கருப்புக் கொடியேற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


வன்னியா் சமூகத்தினருக்கு தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை அமல்படுத்தக் கோரி, பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் வன்னியா் சமூகத்தினா் தங்களது வீடுகளின் முன்பு வெள்ளிக்கிழமை கருப்புக் கொடியேற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
வேலைவாய்ப்பு தொடா்பாக வன்னியா் இட ஒதுக்கீட்டையும் சோ்த்து புதிய அறிவிக்கைகளை அரசு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டத்தில் குன்னம், வேப்பூா், கல்லை, பரவாய், ஆண்டிக் குரும்பலூா், வைத்தியநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, வன்னியா் சமூகத்தினா் தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...