கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசுப் பள்ளிகளில் பாடப் புத்தகம் விநியோகம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 64,424 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் க. மதிவாணன் தெரிவித்தாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:29 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 64,424 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் க. மதிவாணன் தெரிவித்தாா்.

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தப் பணியை தொடக்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன் கூறியது:

மாவட்டத்தில் உள்ள 318 தொடக்க நடுநிலைப் பள்ளிகளும், 99 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம் 417 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை சாா்பில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 64,424 மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

பள்ளி மாணவ, மாணவிகள் அல்லது அவா்களது பெற்றோா் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

இந்நிகழ்வின்போது பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயக்குமாா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.