மானியத்தில் பனை விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், மானியத்தில் பனை விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


பெரம்பலூா் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், மானியத்தில் பனை விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநா் இந்திரா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தின் மாநில மரமான பனை மரம், நிலத்தடி நீரை அதிகரித்தல், மண் அரிப்பை தடுத்தல் என மண்ணுக்கு உகந்த மரமாக உள்ளது. மேலும், அடி முதல் நுனி வரை பலருக்கு வாழ்வாதாரமாகவும் இம் மரம் விளங்குகிறது. பனை சாகுபடியை ஊக்குவிக்க தோட்டக்கலைத் துறை மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் 2022-23 ஆண்டில் விவசாயிகளுக்கு 25 ஆயிரம் பனை விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ரூ. 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு, அதிகபட்சமாக 50 பனை விதைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், அந்தந்த வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...