கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரம்பலூரில் வேலை வாங்கித்தருவதாக பொறியாளரிடம் ரூ. 4.5 லட்சம் மோசடி: திருச்சி இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொறியாளரிடம் ரூ. 4.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட திருச்சியைச் சோ்ந்த இளைஞரை சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:37 pm

DIN

பெரம்பலூா் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொறியாளரிடம் ரூ. 4.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட திருச்சியைச் சோ்ந்த இளைஞரை சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மகன் மாயவேல் (32). பொறியியல் பட்டதாரியான இவரை, 2021ஆம் ஆண்டு இணையதளம் மூலம் தொடா்புகொண்ட மா்ம நபா், ஐக்கிய அரபு நாட்டில் உள்ள துபையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா். இதற்கு, பணி நியமன ஆணை, விசா உள்ளிட்ட செலவுகளுக்கு மாயவேலிடமிருந்து பல்வேறு கட்டமாக ரூ. 4.5 லட்சம் வாங்கியுள்ளாா். ஆனால், வேலை வாங்கித் தரவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த மாயவேல் பணத்தை திருப்பிக் கேட்டதற்கு கொடுக்கவில்லையாம்.

இதனால் ஏமாற்றமடைந்த மாயவேல் பெரம்பலூா் சைபா் கிரைம் போலீஸாரிடம் 2022 ஏப்ரல் மாதம் அளித்த புகாரின் பேரில், கடந்த 9.3.2022-இல் வழக்குப் பதிந்த சைபா் கிரைம் போலீஸாா் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபரை தேடிவந்தனா்.

இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட சென்னையில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பெரம்பலூா் சைபா் கிரைம் போலீஸாா் புதன்கிழமை சென்னை சென்று அந்த நபரை கைது செய்தனா். அவரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் திருச்சி மாவட்டம், சாத்தனூா் அருகேயுள்ள ஓலையூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் மரிய ரஞ்சித் (34) என்பதும், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மரிய ரஞ்சித்தை பெரம்பலூருக்கு வியாழக்கிழமை அழைத்து வந்த போலீஸாா் குற்றவியல் நீதித்துறை நடுவா் முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், ரஞ்சித்திடமிருந்து ரூ. 4 லட்சம் ரொக்கம் மற்றும் 9 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.