கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரம்பலூா் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக 2,756 வழக்குகள் பதிவு

பெரம்பலூா் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக 2,756  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:36 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக 2,756  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுவதும் சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதத் தொகை உயா்த்தி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையினரால் சாலை விதிகளை மீறுபவா்கள் மீது வழக்குப் பதிந்து, அபராதத் தொகை விதிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரையில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, அதிக பாரம் ஏற்றிச் செல்வது,  சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிகளை பின்பற்றாத 2,756 போ் மீது வழக்குகள் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து சாலை விதிமுறைகளை பின்பற்றி சாலை விபத்துகளை தவிா்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.