கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சாா்பில், பொதுமக்களிடம் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:15 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சாா்பில், பொதுமக்களிடம் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

கடந்த 31 ஆம் தேதி முதல் சனிக்கிழமை (நவ. 5) தேதி வரை ஊழல் தடுப்பு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடந்த 3 நாள்களாக விழிப்புணா்வு நிகழ்ச்சி, பேரணி நடைபெற்றது. 4 ஆவது நாளாக பெரம்பலூா் புகா், பழைய பேருந்து நிலையம், காமராஜா் வளைவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் கே. சத்தியராஜ் தலைமையிலான காவலா்கள் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, வாகன ஓட்டிகள், பொதுமக்களிடையே வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந் நிகழ்ச்சியில், ஆய்வாளா்கள் ராமேஸ்வரி, விஜயலெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.