கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் விரைவில் முருங்கை பூங்கா அமைச்சா் தகவல்

கரூரில், விரைவில் முருங்கை பூங்கா அமைக்கப்படும் என்றாா் வேளாண்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:19 pm

DIN

கரூரில், விரைவில் முருங்கை பூங்கா அமைக்கப்படும் என்றாா் வேளாண்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

கரூரில் இந்திய தொழில்கூட்டமைப்பின் கரூா் பிரிவு சாா்பில் சா்வதேச முருங்கை கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கண்காட்சியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். கண்காட்சி அரங்கை பாா்வையிட்டபிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தா.மோ.அன்பரசன் ஆகியோா் கூறியது, அமைச்சா் செந்தில்பாலாஜியின் ஏற்பாட்டின்பேரில் கரூா் மாவட்டத்தில் உள்ள முருங்கை விவசாயிகளின் நன்மைக்காக முருங்கை மூலம் உற்பத்தியாகும் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்க முருங்கை கண்காட்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சா் செந்தில்பாலாஜி இப்பகுதியில் முருங்கை பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதற்கு முதல்வா் ஒப்புதலுடன் இடம் தோ்வு செய்தபிறகு அரசு சாா்பில் முருங்கை பூங்கா அமைக்கப்படும்.

மேலும், பருவமழை சேத மதிப்பு இதுவரை வரவில்லை. பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். வடகிழக்கு பருவமழையால் விவசாயம் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் பாதிப்புகள் ஏற்படும் என கருதப்படும் இடங்களில் அந்தந்த பகுதியில் அதிகாரிகள் தயாராக இருக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.