கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரம்பலூா் அருகே 1,500 கிலோ ரேஷன் அரிசிகடத்தியவா் கைது

 பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு 1,500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:23 pm

DIN

 பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு 1,500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளா் ஞானசேகரன் தலைமையிலான போலீஸாா், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை, நெற்குணம் ஆகியப் பகுதிகளில் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பெரம்பலூா் - வி.களத்தூா் சாலையில் நெற்குணம் சந்திப்புப் பகுதி அருகே வி.களத்தூரிலிருந்து பெரம்பலூா் நோக்கிச் சென்ற சுமை ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், 50 கிலோ எடையுள்ள 30 சாக்கு மூட்டைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1,500 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அரிசி கடத்தலில் ஈடுபட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், தேனூா் கிராமம், மேலத் தெருவைச் சோ்ந்த சின்னசாமி மகன் கலியபெருமாள் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுமை ஆட்டோவையும், அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து கலியபெருமாளை கைது செய்து குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.