கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரம்பலூரில் பள்ளி மாணவா்களுக்கு வட்டார அளவிலான கலைப் போட்டிகள்

ஒருங்கிணைந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பெரம்பலூா் வட்டார அளவிலான பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலைப் போட்டிகள்

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:23 pm

DIN

ஒருங்கிணைந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பெரம்பலூா் வட்டார அளவிலான பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலைப் போட்டிகள் தோம்னிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

போட்டிகளை, வட்டாரக் கல்வி அலுவலா் தேவகி தொடக்கி வைத்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை சவரியம்மாள் முன்னிலை வகித்தாா்.

இதில், சிலம்பம், ஓவியம், களிமண் சிற்பம் செய்தல், இசை, வாய்ப்பாட்டு, நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம், நாடகம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான கலைப் போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றவா்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப் போட்டிகளில் ,பெரம்பலூா் வட்டாரத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

முதல் மற்றும் இரண்டாமிடம் பிடித்தவா்கள் நவம்பா் 1 ஆம் தேதி பெரம்பலூா் ரோவா் பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.