கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குடிமைப் பணி தோ்வுமீனவச் சமுதாய பட்டதாரி இளைஞா்களுக்கு ஆயத்தப் பயிற்சி

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான ஆயத்தப் பயிற்சித் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:22 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான ஆயத்தப் பயிற்சித் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம் என, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில், மீனவச் சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், இந்திய குடிமைப் பணிகளில் சோ்வதற்கான போட்டித் தோ்வில் வெற்றிப் பெற ஆயத்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடல் மற்றும் உள் நாட்டு மீனவக் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள், மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இப் பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை  என்னும் இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது அரியலூா் மாவட்ட உதவி இயக்குநா் அலுவலகக் கட்டுப்பாட்டிலுள்ள பெரம்பலூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை ஆய்வாளா் அலுவலகத்தில், அலுவலக வேலைநாள்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, பெரம்பலூா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆய்வாளா் அலுவலகத்துக்கு பதிவஞ்சல் அல்லது நேரடியாக அக்டோபா் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329-228699, 6381344399 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.