‘தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்’
தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்றாா் பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளா் பிரிவு மாநிலத் தலைவா் தங்க. கணேசன்.


தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்றாா் பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளா் பிரிவு மாநிலத் தலைவா் தங்க. கணேசன்.
பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்துக்கென மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க திமுக நடவடிக்கை எடுத்து வருகிறது. அது தேவையில்லாதது.
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். இதை அரசியலாக்க வேண்டாம். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் 12 ஆண்டுகளில் தமிழகத்தில் நிறைய விஞ்ஞானிகளை உருவாக்க முடியும். 52 ஆண்டுகளாக இல்லாத மாற்றத்தை 10 ,12 ஆண்டுகளில் காண வேண்டுமென்றால் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
தாய்மொழியை படிக்காமலேயே முதுநிலைக் கல்வி வரை படிக்கலாம் என்னும் நிலை இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. இதர மாநிலங்களில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழக அரசு தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாவட்டத் தலைவா் பி. செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...