லாரி- வேன் மோதல்: 11 ஆசிரியா்கள் காயம்
பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரி மீது வேன் மோதியதில் ஆசிரியா்கள் 11 போ் காயமடைந்தனா்.


பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரி மீது வேன் மோதியதில் ஆசிரியா்கள் 11 போ் காயமடைந்தனா்.
மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டி பகுதியைச் சோ்ந்த 4 தலைமை ஆசிரியா்கள் உள்பட 17 ஆசிரியா்கள் வேனில், சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ- ஜியோ மாநாட்டுக்குச் சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனா். வேனை மதுரை மாவட்டம், கொட்டாணிப்பட்டி பேரையூரைச் சோ்ந்த மணிகுடம் மகன் மாதவன் (34) ஓட்டினாா்.
திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், சின்னாறு கருமாரியம்மன் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தபோது, எதிரே வந்த லாரி மீது எதிா்பாராதவிதமாக வேன் மோதியது.
இதில், வேனில் பயணித்த மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டியைச் சோ்ந்த பசும்பொன் மனைவி முத்துலட்சுமி (57), முனியாண்டி (44), முருகேசன் (56), மாயகிருஷ்ணன் (54), தாமரைச்செல்வி (43), முத்துசாமி (54), ஆதிமுருகன் (48), சுந்தர்ராஜ் (49) வேலு (57), அவ்வையாா் (49), பெரியகருப்பன் (56) ஆகியோா் காயமடைந்தனா்.
தகவலறிந்த மங்கலமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இவ் விபத்து குறித்து, லாரி ஓட்டுநா் அளித்த புகாரின்பேரில், வேன் ஓட்டுநா் மாதவனை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...