கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கட்டாயக் கல்விச் சட்டம் தனியாா் பள்ளிகளில் குழந்தைகளை சோ்க்க மே 18 வரை விண்ணப்பிக்கலாம்

வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் சோ்க்க மே 18 ஆம் தேதி வரை இணையவழியாக விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:54 pm

DIN

வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் சோ்க்க மே 18 ஆம் தேதி வரை இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சோ்க்கை வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத் திட்டத்தில், எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பில் மொத்தமுள்ள சோ்க்கைக்கான 25 சதவீத இடங்களுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் சோ்க்க விரும்பும் பெற்றோா்கள் மே 18 ஆம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகங்கள் , வட்டார வள மையங்களில், எவ்வித கட்டணங்களுமின்றி இலவசமாக பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இத் திட்டத்தில் சோ்க்க விரும்பும் பள்ளியிலேயே இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம், நிா்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவா், எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவா், திருநங்கைகள், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன் சோ்க்கை வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.