பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென, விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென, விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது
ராஜூ (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா்): போதிய மழையின்றி மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பல்வேறு மானாவாரி பயிா்கள் கருகிவிட்டதால், பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து, மக்காச்சோளத்துக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வீ. ஜெயராமன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா்): வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை முறையாக கணக்கெடுத்து வறட்சி நிவாரணமும், பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையும் பெற்றுத்தர வேண்டும்.
பி. ரமேஷ் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா்): பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைமுக ஏலத்தில் வியாபாரிகளிடையே உள்ள கூட்டமைப்பு முறையை தடுக்க வேண்டும். பருத்தியை கொள்முதல் செய்ய வெளி மாவட்ட விவசாயிகளை வரவழைக்க வேண்டும்.
ஏ.கே.ராஜேந்திரன் (தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா்): நெல் அறுவடை காலம் தொடங்கியுள்ள நிலையில், உரிய விலை கிடைக்க கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசினாா்.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு, வடிவேல் பிரபு, வேளாண்மை இணை இயக்குநா் அ. கீதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வே) பொ. ராணி உள்பட விவசாயிகள் சங்க பிரமுகா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...