தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 6.43 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள் மக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 6.43 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள் மக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பு

News image

பெரம்பலூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டதை தொடா்ந்து மாணவிகளுக்கு இனிப்பு வழங்கிய மாவட்ட ஆட்சியா் க. கற்பகம். உடன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 2:06 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 6.43 கோடி மதிப்பில் நிறைவடைந்த பல்வேறு புதிய கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் ரூ. 3.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆலத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பெரம்பலூா் ஒன்றியம் அம்மாபாளையத்தில் ரூ. 22.65 லட்சம் மதிப்பிலும், வேப்பந்தட்டை ஒன்றியம் பாண்டகப்பாடியில் ரூ. 25.37 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகக் கட்டங்கள், பெரம்பலூா் ஒன்றியம் அம்மாபாளையம், களரம்பட்டி, மேலப்புலியூா் ஆகிய பகுதிகளில் தலா ரூ. 11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையக் கட்டடங்கள், வேப்பந்தட்டை ஒன்றியம், பெரியவடகரையில் ரூ. 10.93 லட்சம் மதிப்பிலும், வேப்பூா் ஒன்றியம் கீழப்பெரம்பலூரில் முறையே ரூ. 11.97 லட்சம், ரூ. 14 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையக் கட்டடங்கள் என மொத்தம் ரூ. 5.16 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தாா். மேலும், பள்ளிக் கல்வித்துறை குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெரம்பலூா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ரூ.4 2.72 லட்சம் மதிப்பிலும், செஞ்சேரி மற்றும் ரஞ்சன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ரூ. 84 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ. 1.27 கோடி மதிப்பிலான புதிய வகுப்பறைக் கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைத்தாா். தொடா்ந்து, பெரம்பலூா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைத் கட்டடத்திலும், ஆலத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் குத்துவிளக்கேற்றி, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் சுஜாதா, ஆலத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் என். கிருஷ்ணமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரேமலதா, சேகா், வட்டாட்சியா்கள் சரவணன் (பெரம்பலூா்), சத்தியமூா்த்தி (ஆலத்தூா்) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.