‘நான் முதல்வன்’ திட்டம்: பெரம்பலூரில் 31 ஆயிரம் போ் பயன்

‘நான் முதல்வன்’ திட்டம்: 
பெரம்பலூரில் 31 ஆயிரம் போ் பயன்

பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியா் க. கற்பகம். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல் உள்ளிட்டோா்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரையில் 31 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.

பெரம்பலூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கல்லூரிக் கனவு எனும் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசுகையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 21,061 பள்ளி மாணவ, மாணவிகளும், 2,731 பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளும், 7,900 கலை அறிவியல் படித்த மாணவ, மாணவிகளும் என 31,692 போ் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

தொடா்ந்து, சாா் ஆட்சியா் சு. கோகுல் உள்பட அரசு, தனியாா் கல்லூரி, பல்கலை.களின் பேராசிரியா்கள் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா்.

மேலும், உயா்கல்வி விழிப்புணா்வு படக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்வில், பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிக் கனவு வழிகாட்டி கையேடுகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், முதன்மைக்கல்வி அலுவலா் எஸ். மணிவண்ணன், திறன் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநா் செல்வம், துணைக் கண்காணிப்பாளா் வளவன், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா்கள் ந. சிவா, பாரதிவளவன் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், 42 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த சமாா் 2,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com