மோட்டாா் சைக்கிள் திருடியவா் கைது

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருடியவரை அரும்பாவூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருடியவரை அரும்பாவூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சீனிவாசன். இவா், கடந்த மே 5 ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளை வீட்டின் எதிரே நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் பாா்த்தபோது மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், அரும்பாவூா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் சிற்றரசன் தலைமையிலான போலீஸாா் பூலாம்பாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், பூலாம்பாடியை சோ்ந்த சாமிதுரை மகன் மணிகண்டன் (30) என்பதும், சீனிவாசனின் மோட்டாா் சைக்கிளை திருடிச்சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்த போலீஸாா் குற்றவியல் நீதிமன்றத்தில் மணிகண்டனை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X