70 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ குட்கா பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.


பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ குட்கா பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கிராமத்தில் சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி, குன்னம் காவல்நிலைய ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் பாண்டியன் (40), தனது வீட்டில் சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட 10 கிலோ குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஓலைப்பாடி கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் கரும்பாயிரம் (39) என்பவரது காரை சோதனையிட்டதில், 60 கிலோ குட்கா பொருள்கள் கடத்துவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னா், மேற்கண்ட இருவரிடமிருந்தும் ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான 70 கிலோ குட்காவையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த போலீஸாா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பாண்டியன், கரும்பாயிரத்தை சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...