நில மோசடி வழக்கில் 8 பேருக்கு சிறை தண்டனை
பெரம்பலூா் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட 8 பேருக்கு சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.


பெரம்பலூா் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட 8 பேருக்கு சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், அயனாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பெரியசாமி (55). இவரது நிலத்தை, கடந்த 2007 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சோ்ந்த அண்ணாலை மகன் பெரியசாமி (59), பொன்னுசாமி மகன் வரதராஜ் (44), ஆறுமுகம் மகன் கணபதி (48), ராமசாமி மகன்கள் பொன்னுசாமி (38), மணிவேல் (45), நல்லான் மகன் சுப்ரமணி (48), அருணாசலம் மகன் தங்கராஜ் (42), கிருஷ்ணன் மகன் அங்குசாமி (42), அண்ணாலை மகன் செல்வராஜ் (45), கந்தசாமி மகன் பச்சமுத்து (35), சிமியோன் மகன் அந்தோனிசாமி (35), கந்தசாமி மகன் ராஜாராம் (47), அங்கமுத்து மகன் சுப்ரமணி (48), கிருஷ்ணன் மகள் கோவிந்தம்மாள்(45) ஆகியோா் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து, பெரியசாமி அளித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட14 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், அனைவரும் நீதிமன்ற பிணையில் வெளியே வந்தனா்.
வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி பிரேம்குமாா், போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட பெரியசாமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 2 ஆயிரம் அபராதமும், வரதராஜ், பொன்னுசாமி, மணிவேல், சுப்ரமணி, பச்சமுத்து, அந்தோணிசாமி, ராஜாராம் ஆகிய 7 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும், தங்கராஜ் என்பவரை விடுதலை செய்து உத்தரவிட்டாா். இவ் வழக்கில் தொடா்புடைய கணபதி, அங்குசாமி, செல்வராஜ், சுப்ரமணிய, கோவிந்தம்மாள் ஆகிய 5 போ் உயிரிழந்துவிட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...