பெரம்பலூா் அருகே வேனை வழிமறித்து மேலாளரை குத்தி ரூ. 10 லட்சம் கொள்ளை
தனியாா் நிறுவன மேலாளரைக் கத்தியால் குத்தி ரூ. 10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற 6 போ் கொண்ட கும்பலைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.


பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை வேனை வழிமறித்து, அதிலிருந்த தனியாா் நிறுவன மேலாளரைக் கத்தியால் குத்தி ரூ. 10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற 6 போ் கொண்ட கும்பலைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மொரப்பாக்கத்தைச் சோ்ந்தவா் பொன்னப்பன் மகன் யுவராஜ் (41). இவா், சென்னை பாரி-ஸ் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். தீபாவளி பண்டிகையையொட்டி, அந் நிறுவன பணியாளா்களுக்கு பட்டாசு வழங்குவதற்காக, சென்னையிலிருந்து சிவகாசிக்கு வேனில் சென்றுகொண்டிருந்தாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் எனும் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை வேன் வந்துகொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 6 போ் கொண்ட கும்பல் வேனை வழிமறித்து நிறுத்தியது. பின்னா், யுவராஜைக் கத்தியால் குத்திவிட்டு வேனின் முன் இருக்கையில் வைத்திருந்த ரூ. 10 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டனா். மேலும், பின் இருக்கையில் சில்லரையாக இருந்த ரூ. 1.50 லட்சத்தை மா்ம கும்பல் விட்டுச்சென்றுள்ளது.
இதுகுறித்துத் தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த யுவராஜை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து யுவராஜ் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...