இஸ்ரோ கட்டுரைப் போட்டி வாலிகண்டபுரம் அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு
வாலிகண்டபுரம் அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு...


திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரி இஸ்ரோவில், உலக விண்வெளி வார விழா கட்டுரைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு முன்னாள் மாணவா் சங்கத்தினா் ரொக்கப் பரிசு மற்றும் கேடயம், வாழ்த்து மடல் வியாழக்கிழமை வழங்கினா்.
இஸ்ரோ மகேந்திரகிரி வளாகத்தில், அக். 10-இல் நடைபெற்ற விழாவில், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளான ஆா். கனிமொழி ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் முதலிடமும், எஸ். ரித்திகா தமிழ்க்கட்டுரைப் போட்டியில் 2-ஆவது இடமும் பெற்றனா். இதையடுத்து, சாதனை புரிந்த மாணவிகளுக்குப் பாராட்டு விழா வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது. செயலா் செல்லமுத்து, பொருளாளா் விசுவேசுவரய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாதனை மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து, ரொக்கப் பரிசும், கேடயமும் வழங்கிப் பாராட்டு தெரிவித்தனா்.
இந் நிகழ்ச்சியில் பள்ளி முன்னாள் மாணவா்களான தமிழ்நாடு கனிமவள நிறுவன திருச்சிக் கோட்ட மேலாளா் மருத. மனோகரன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா் வளவன், முன்னாள் மாணவா் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் பெத்துசாமி, கிருஷ்ணமூா்த்தி, சையத் பாஷா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
வழிகாட்டி ஆசிரியா் முனைவா் மு. ஆனந்தராஜா, உடற்கல்வி ஆசிரியா் சத்தியசீலன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். விழா ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியா்கள் அகிலாண்டேஸ்வரி, லதா ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியா் க. செல்வராசு வரவேற்றாா். நிறைவாக, உதவித் தலைமை ஆசிரியா் வெ. வீரையன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...