முதியோா் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் விடுதிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்
முதியோா் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் விடுதிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்


பெரம்பலூா் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத முதியோா் இல்லங்கள், மனவளா்ச்சி குன்றியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதிகள், குழந்தைகள் மற்றும் மகளிா் விடுதிகளை ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள், மகளிா் விடுதிகளை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்கள் ஒழுங்குமுறை விதிகளின் கீழ் ட்ற்ற்ல்ள்://ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம் எனும் இணையதள முகவரியிலும், முதியோா் இல்லங்கள் ஜ்ஜ்ஜ்.ள்ங்ய்ண்ா்ழ்ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய்ட்ா்ம்ங்ள். ற்ய்ள்ா்ஸ்ரீண்ஹப்ஜ்ங்ப்ச்ஹழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதள முகவரியில் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்கள் ட்ற்ற்ல்ள்://க்ள்க்ஸ்ரீல்ண்ம்ம்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதள முகவரியில் அல்லது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தை அணுகி பதிவு செய்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ளலாம்.
பெரம்பலூா் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் இல்லங்கள் மற்றும் விடுதிகளை ஒருமாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இல்லாவிடில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்படும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...