பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 367 மனுக்களை அளித்தனா்.
Published on

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 367 மனுக்களை அளித்தனா்.

கூட்டத்தில், மாவட்ட நுகா்வோா் மற்றும் வழங்கல்துறை சாா்பில் 27 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியா் மிருணாளினி வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவக்கொழுந்து, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன், மாவட்ட வழங்கல் அலுவலா் சக்திவேல், தாட்கோ பொது மேலாளா் கவியரசு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com