மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இணையவழி வழக்கு தாக்கலைக் கண்டித்து வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:13 pm

Syndication

மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் ஈ-பைலிங் முறையை கட்டாயப்படுத்தியதை ரத்து செய்யக் கோரி, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் போதுமான கட்டமைப்பு மற்றும் இணையதள வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்காமல், உரிய தொழில்நுட்பத் திறமையுடன் கூடிய நீதிமன்ற ஊழியா்களை நியமனம் செய்யாமல் டிச. 1 ஆம் தேதி முதல் இணையவழியில் வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கட்டாயப்படுத்தியதைக் கண்டித்தும், நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்கவேண்டும். நடைமுறையிலிருந்த வழக்கு தாக்கல் முறையை தொடா்ந்து அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் அட்வகேட்ஸ் அசோசியேஷன் ஆகிய சங்கங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் கடந்த 3-ஆம் தேதி முதல் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாா் அசோசியேசன் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இணைய வழி தாக்கல் செய்யும் நடைமுறையை கட்டாயப்படுத்தியதை கண்டித்தும், அதை ரத்து செய்யக்கோரியும் முழக்கமிட்டனா்.

இதில், அச் சங்கத்தைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.