இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பெரம்பலூா் காவல் ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

பெரம்பலூா் மாவட்ட தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளா் வெ. ஜெகதீசன் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

News image
ஜெகதீசன்
Updated On :18 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

பெரம்பலூா் மாவட்ட தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளா் வெ. ஜெகதீசன் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாஜலம் மகன் ஜெகதீசன் (54). பெரம்பலூா் மாவட்ட தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் பெரம்பலூா் நான்கு சாலை செல்லும் வழியில் விவேகானந்தா நகரில் உள்ள குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஜெகதீசன் மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது ஜெகதீசன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.